காங்கயம், உடுமலை பகுதிகளில் நாளை (17ம் தேதி) மின்தடை
Tirupur News,Tirupur News Today- காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் மற்றும் உடுமலை பாலப்பம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை பகுதிகள் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி
காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், நால்ரோடு, படியூர்.
சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி. ஆர். பாளையம், ஜி. வி. பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ. ஜெ. நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம் நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி, முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உடுமலை; பாலப்பம்பட்டி துணை மின் நிலையம் பகுதியில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பாலப்பம்பட்டி துணை மின் நிலையம் - மின்தடை பகுதிகள் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)
உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ். வி. , புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனுார், குரல்குட்டை, மடத்துார், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள் புதுார், கொமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என, உடுமலை மின்வாரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.