விநாயகர் சதுர்த்தி; திருப்பூரில் இருந்து 90 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை

Tirupur News- விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு, 90 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.;

Update: 2023-09-16 15:36 GMT

Tirupur News- திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- ஞாயிற்றுக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 90 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என, அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

நாளை முகூர்த்த தினம், 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை என்பதால், வெளியூர் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். பயணிகள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 20 பஸ்கள், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு 50 பஸ்கள், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகை, வேளாங்கன்னி உள்ளிட்ட பகுதிகளுக்கு 20 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 90 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து திருப்பூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது,

கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நாள் முழுவதும் பஸ் இயக்கப்படும். வெளியூர் சென்றவர் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை இரவு சிறப்பு பஸ் இயங்கும். அனைவருக்கும் ஒரே நேரத்தில் பயணிக்க திட்டமிடாமல், முன்கூட்டியே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, பஸ்களின் தங்களுக்கான இருக்கையை உறுதி செய்து கொள்வது நல்லது. சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

திருப்பூர் பனியன் தொழில் நகரமாக இருப்பதால், பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திருப்பூரில் வசிக்கின்றனர். தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, புத்தாண்டு போன்ற காலகட்டங்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பங்களுடன் செல்கின்றனர். பின், சில தினங்கள் அங்கு விடுமுறையை கழித்துவிட்டு, மீண்டும் திருப்பூர்  திரும்புவது வழக்கமாக உள்ளது. மேலும், இதுபோன்ற விசேஷ நாட்களில் வெளிமாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்வதும் பலரது வழக்கமாக உள்ளதால், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, தற்போது திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கும் என்ற அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கை, பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News