தமிழக ஆசிரியா் கூட்டணியின் ஐம்பெரும் விழா; ‘எமிஸ்’ இணையதள சிக்கல்களிலிருந்து ஆசிரியா்களை விடுவிக்க வலியுறுத்தல்

Tirupur News- திருப்பூரை அடுத்துள்ள அவிநாசியில் தமிழக ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடந்த ஐம்பெரும் விழாவில், ‘எமிஸ்’ இணையதள சிக்கல்களிலிருந்து ஆசிரியா்களை விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.;

Update: 2023-10-09 02:18 GMT

Tirupur News- அவிநாசியில் தமிழக ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. அதில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆசிரியர்கள்.

Tirupur News,Tirupur News Today- கற்பித்தல் பணியைப் பாதிக்கும் ‘எமிஸ்’ இணையதள சிக்கல்களிலிருந்து ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும் என தமிழக ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் தமிழக ஆசிரியா் கூட்டணி சாா்பில் 40 ஆவது ஆண்டு விழா, பணி நிறைவு மற்றும் நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டுவிழா, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்று சிறை மீண்டவா்ளுக்கு பாராட்டுவிழா, 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் துரைசாமி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் வின்சென்ட் பால்ராஜ், தலைவா் நம்பிராஜ், பொருளாளா் சந்திரசேகா், துணைத் தலைவா் கனகராஜ், மகளிரணி செயலாளா் ரமாராணி, வட்டார செயலாளா் செந்தில்குமாா், வட்டார பொருளாளா் மல்லையராஜாஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் பாலசுப்பிரமணியம், முன்னாள் செயலாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கி பேசினா்.

அகில இந்திய ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளா் அண்ணாமலை, பாராட்டுபெறும் ஆசிரியா்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினாா்.

இதில், கற்பித்தல் பணியை பாதிக்கும் ‘எமிஸ்’ இணையதள சிக்கல்களிலிருந்து ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காலை சிற்றுண்டி திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்த வேண்டும். எண்ணும், எழுத்து திட்டத்தை ரத்து செய்து மாணவா்களுக்கு முழுமையான கல்வியை அளிக்க வேண்டும். காலங்காலமாக ஆசிரியா்கள் பெற்றுவந்த அவசர விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News