திருப்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் காய்ச்சல் தடுப்பு முகாம்

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், டிசம்பர் மாதம் இறுதி வரை, வாரந்தோறும் சனிக்கிழமை காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-11-04 16:27 GMT
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், டிசம்பர் இறுதி வரை காய்ச்சல் முகாம் நடத்த முடிவு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துவக்கியுள்ளது.

இதையொட்டி வருகிற டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட நிலையம், நகர்ப்புற நிலைய அளவில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படும். காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருந்து, மாத்திரை வழங்கப்படும். யாருக்காவது தொடர் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டால், அவர்களை அழைத்து, மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த அறிவிப்பை மாற்றி, பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, இனி, ஞாயிற்றுக்கிழமைக்கு பதில், சனிக்கிழமையில் முகாம் நடக்கும். நடப்பு வாரம், 5-ம் தேதிக்கு பதிலாக, இன்று காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், ஞாயிறன்று முகாம் நடத்தினால், அதற்கு அடுத்த நாள் (திங்கள்) டாக்டர், செவிலியர் குழுவுக்கு விடுமுறை அளிக்க வேண்டியுள்ளது. சனிக்கிழமை முகாம் நடத்தினால், அதற்கான அவசியம் இல்லை. எனவே சனிக்கிழமைக்கு காய்ச்சல் தடுப்பு முகாம் மாற்றப்பட்டுள்ளது, என்றார்.

Tags:    

Similar News