கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26-ம் தேதி பல்லடத்தில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு

Tirupur News- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 26-ம் தேதி பல்லடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.;

Update: 2024-01-20 16:29 GMT

Tirupur News- வரும் 26ம்  தேதியன்று போராட்டம் நடத்தப் போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- விவசாயிகளின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வரும் ஜனவரி 26- ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சுக்கம்பாளையம் ஊராட்சியில் சாலை அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், குடிநீா் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக கடந்த அக்டோபா் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியின்போது தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதியளித்தும் தற்போது வரை காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

ஆகவே, சுக்கம்பாளையம் ஊராட்சி பொதுமக்களை ஒன்றுதிரட்டி ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக்கூட்டத்தைப் புறக்கணித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனப்  பேரணி நடத்த முடிவு 

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வரும் ஜனவரி 26- ம் தேதி வாகனப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய கூட்டமைப்பின் கூட்டுக் கூட்டம் ஏஐடியூசி பனியன் பேக்டரி லேபா் யூனியன் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

மத்திய பாஜக அரசு விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே, மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியன சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து வரும் ஜனவரி 26- ம் தேதி நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வாகனப் பேரணி நடத்துவதாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் காந்தி நகரில் ஜனவரி 26- ம் தேதி காலை 10 மணி அளவில் வாகனப் பேரணி தொடங்கி திருப்பூா் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறைவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்.பி.எப், ஐஎன்டியூசி, எம்.எல்.எஃப்., விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News