திருப்பூர் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Tirupur News Today: திருப்பூர் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறவுள்ளது.

Update: 2023-05-23 10:21 GMT

Tirupur News Today: திருப்பூர் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறவுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண்: 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகள் குறை தீர்க்ககும் நாள் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News