மின்கட்டண அபராதம் ரூ. 69 லட்சம் தள்ளுபடி; தமிழக அரசுக்கு திருப்பூர், கோவை விசைத்தறியாளா்கள் நன்றி
Tirupur News- தமிழகத்தில் விசைத்தறிகளின் மின் கட்டண அபராதத் தொகை ரூ.69 லட்சத்தை தள்ளுபடி செய்த தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.;
Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் விசைத்தறிகளின் மின் கட்டண அபராதத் தொகை ரூ.69 லட்சத்தை தள்ளுபடி செய்த தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்ந்த தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் அனுமதி வங்கியிருந்தது. இதன்படி கடந்த 2022ம் ஆண்டில் செப்டம்பர் 10ம் தேதி மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு அக்கட்சியின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இந்நிலையில் எதிர்க்கட்சியான அதிமுகவும் போராட்டதை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வுப்படி வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் எந்த விதத்திலும் தடைப்படாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளுக்கான இதர மின் கட்டணம் 12-52 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இதன் மூலம் ரூ.55 முதல் ரூ.1130 வரை கட்டண உயர்வு இருக்கும். மட்டுமல்லாது மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் வரையில் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விளக்கம் மாநில அரசின் நிதிச்சுமை மற்றும் மாநில மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் அதனை ஈடுகட்டவும் சரிசெய்யவும் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று திமுக அரசு தெரிவித்தது. இது மின் கட்டணத்தோடு மட்டும் நின்றுவிடாமல், புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தையும் உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்ததாகவும், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மின் கட்டணம் குறைவாகதான் உயர்த்தப்படுவதாகவும் மின் கட்டண உயர்வுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வருவாய் புதிய கட்டணத்தில் மாற்றங்கள் இருந்தாலும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதில் 100 யூனிட் மின்சாரம் தேவையில்லை என்போர் அரசுக்கு எழுதி கொடுக்கலாம் என்றும் மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டணம் மூலமாக ரூ.59,435 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் விசைத்தறிகளின் மின் கட்டண அபராதத் தொகை ரூ.69 லட்சத்தை தள்ளுபடி செய்த தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க தலைவா் வேலுசாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் கூறியதாவது,
திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் விசைத்தறிகளுக்கான மின் கட்டணம் கடந்த ஆண்டு உயா்த்தப்பட்டது. ஏற்கெனவே விசைத்தறித் தொழில் நலிவடைந்து உள்ளதால் மின் கட்டண உயா்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து கடந்த மாா்ச் மாதம் விசைத்தறிகளுக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டது.
மின் கட்டணத்தை குறைக்கக் கோரி விசைத்தறியாளா்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்தனா். இதனால், 10.09.22 முதல் 01.03.23 வரையிலான கால காட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்ததற்காக மின் வாரியம் சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
மின் கட்டணத்துக்கான அபராதத் தொகையை ரத்து செய்யக்கோரி விசைத்தறியாளா்கள் தமிழக அரசு வலியுறுத்தி வந்தனா். விசைத்தறியாளா்களின் கோரிக்கையை ஏற்று அபராத கட்டணத்தை தமிழக அரசே செலுத்துவதாக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்திருந்தது. இதற்கு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் தற்போது ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் விசைத்தறியாளா்களின் மின் கட்டண அபராதத் தொகை ரூ.69 லட்சத்தைத் தள்ளுபடி செய்த தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் சாா்பில் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனா்.