மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம், சந்தேகம் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்; திருப்பூர் போலீஸ் எஸ்பி வலியுறுத்தல்
Tirupur News- திருப்பூரில் மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். சந்தேக நபர்கள் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, மாவட்ட எஸ்பி சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களிடம் பல லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது,
எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கடன் தருவதாகவும், குறைவான வட்டியில் கடன் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் பொய்யான விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். ஆன்லைனில் வேலைவாங்கி தருவதாகவும், பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் ஏமாற்றுகிறார்கள். தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இனிவரும் காலங்களில் இதுபோல் அரசால் அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்து முதலீடு செய்ய வேண்டாம். இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து உண்மை தன்மையை அறியலாம்.
வீடு, கடையின் உரிமையாளர்கள் வாடகைக்கு விடும்போது அந்த நபர்கள் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்தும், அவர்களின் பான்கார்டு, ஆதார் கார்டு, நிரந்தர முகவரி ஆகிய ஆவணங்களை பெற வேண்டும். நபர்கள் குறித்து சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கலாம்.
ஆன்லைனில் தங்களது வங்கியின் மூலமாக பேசுவதாக கூறி வங்கி கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என்றும், ஓ.டி.பி. நம்பரை பகிருமாறு கூறினால் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுவார்கள். அவ்வாறு கூறாமல் எச்சரிக்கையாக இருங்கள். பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், வியாபார நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதனால் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கிராம கண்காணிப்பு கமிட்டி உருவாக்கி அதன் மூலமாக போலீசுடன் நல்லுறவு ஏற்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம்.
கண்காணிப்பு கமிட்டி உருவாக்கி அதன் மூலமாக போலீசுடன் நல்லுறவு ஏற்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம்.
வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேலைக்கு வரும் நபர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர் அந்த நபரின் முழு விவர ஆதாரங்களை பெற வேண்டும். நபர் குறித்து போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்ழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.