வரம்பு மீறிய திமுக எம்எல்ஏ- அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு; திருப்பூரில் பரபரப்பு

Tirupur MLA- தனது தொகுதிக்குள் வரம்பு மீறி விட்டதாக திமுக எம்எல்ஏ மீது, அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு கூறியுள்ளார்.;

Update: 2023-06-11 11:31 GMT

Tirupur News,Tirupur News Today- திமுக எம்எல்ஏ மீது, அதிமுக எம்எல்ஏ புகார் (மாதிரி படம்)

Tirupur MLA- திருப்பூரில் அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தவர் எம்எஸ்எம் ஆனந்தன். அதிமுக ஆட்சி காலத்தில் வனத்துறை அமைச்சராக பதவியில் இருந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் பல்லடம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது, பல்லடம் தொகுதி எம்எல்ஏ வாக ஆனந்தன் இருந்து வருகிறார்.

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ வாக இருப்பவர் செல்வராஜ். திருப்பூர் மத்திய திமுக மாவட்ட செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.  இவர், திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயராகவும் பதவி வகித்தவர்.

திருப்பூர் தெற்கு எம்எல்ஏ வான செல்வராஜ் கடந்த 9ம் தேதி பல்லடத்தில் நடந்த ரேஷன் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதற்கு பல்லடம் தொகுதி எம்எல்ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான ஆனந்தன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தனக்கு அழைப்பு இல்லாமல், செல்வராஜ் வந்து கலந்து கொண்டு சென்றிருப்பது வரம்பு மீறிய செயல் என குற்றம் சாட்டியுள்ளார்.

பல்லடம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், தொகுதியில் எந்த பணியும் செய்யாதது போல திமுக மாவட்ட செயலாளர் என்று அதிகாரத்தில், செல்வராஜ் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருவதாகவும் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட முக்கியமான பத்து பிரச்சனைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பல மாதங்களாகியும் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் மக்கள் பிரச்னைகளை தீர்க்க, அதற்கான திட்டங்களை செயல்படுத்த திமுக எம்எல்ஏ செல்வராஜ் முயற்சி எடுக்க வேண்டும் எனவும், அவரது திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள, மக்களின் முக்கிய  பிரச்சனைகளை முதலில் தீர்த்து விட்டு, அடுத்த தொகுதிக்குள் வரவேண்டும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News