திருப்பூரில் பாரம்பரிய காய்கறி விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருது
Tirupur News-திருப்பூரில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருது வழங்கப்பட உள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவலான விருது வழங்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் மாவட்ட அளவலான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். இதில் தோட்டக்கலைத் துறை இணையதளம் மூலமாகவும், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்கள் மூலமாகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டுச் சோ்த்தல், நீா்மேலாண்மை மற்றும் முறையான மண்வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணா் குழு மூலம் சிறந்த விவசாயிகள் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.
விருது பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வரைவோலை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.