திருப்பூரில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி; ஆர்வமாக பங்கேற்ற மாணவ மாணவியர்

Tirupur News- திருப்பூரில் மாவட்ட அளவில் நடந்த அண்ணா சைக்கிள் போட்டியில், ஆர்வமாக பங்கேற்ற மாணவ மாணவியர் பரிசுகளை வென்றனர்.;

Update: 2023-10-18 02:53 GMT

Tirupur News- திருப்பூரில் மாவட்ட அளவில் அண்ணா சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரை பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

13 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவு

பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தீக்ஷனா, விஜயலட்சுமி, ஜெய்ஸ்ரீராம் அகாடமி மாணவி பொன்ரிகாஷினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

15 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவு

பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தையும், சன்மதி 2-வது இடத்தையும், அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் அகாடமி பள்ளி மாணவி நேகா 3-வது இடத்தையும் பெற்றனர்.

17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவு

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் அஞ்சலி சில்வி, மதுமிதா, ராகவர்த்தினி ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.

13 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவு

திருப்பூர் சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி பள்ளி மாணவர் சாம் பிரசாத் முதலிடத்தையும், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் விஸ்வா 2-வது இடத்தையும், ஜீவானந்தம் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு

காங்கயம் எஸ்.ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முகுந்தன் முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிஷ் 3-வது இடத்தையும் வென்றனர்.

17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர் மணிபிரசாத் முதலிடத்தையும், பெருமாநல்லூர் அரசு பள்ளி மாணவர் கோடீஸ்வரன் 2-வது இடத்தையும், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர் முகமது இப்ராகிம் வாசிக் 3-வது இடத்தையும் வென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், உடற்கல்வி இயக்குனர் ராஜாராம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட கபடி நடுவர் குழு தலைவர் முத்துசாமி, நேரு யுவகேந்திரா ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News