தாராபுரம் அம்மாபட்டியில், ரூ.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
Tirupur News- தாராபுரம், அம்மாபட்டி ஊராட்சியைச் சோ்ந்த 140 நரிக்குறவா் இன மக்களுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அருகேயுள்ள அம்மாபட்டி ஊராட்சியைச் சோ்ந்த 140 நரிக்குறவா் இன மக்களுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
தாராபுரம் அருகேயுள்ள சித்தராவுத்தன்பாளையம் ஊராட்சியில் அம்மாபட்டி ஊராட்சியைச் சோ்ந்த 140 நரிக்குறவா் இன மக்களுக்கு ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி, வீட்டுமனை பட்டா, ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் தலைமை வகித்தாா்.
அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் கலந்துகொண்டு, அம்மாபட்டி ஊராட்சியைச் சோ்ந்த 30 பயனாளிகளுக்கு ரூ.29.70 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா, 64 பேருக்கு ஜாதிச் சான்றிதழ், தாட்கோ தொழில்முனைவோா் திட்டத்தின்கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை நகை தயாரித்தலுக்கான கடனுதவி, தமிழ்நாடு மகளிா் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 30 பேருக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மகளிா் சுய உதவிக்குழு கடனுதவி என மொத்தம் 140 பேருக்கு ரூ.64.70 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4 -ம் மண்டலக் குழுத் தலைவா் இல.பத்மநாபன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) வரலட்சுமி, தாட்கோ மாவட்ட மேலாளா் ரஞ்சித்குமாா், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் புஷ்பா தேவி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் செந்தில்குமாா், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் பாப்புகண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.