தக்காளி லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி திருட்டு

தாராபுரத்தில், தக்காளி பெட்டியுடன் லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த, 25 ஆயிரம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டது.

Update: 2021-12-29 14:00 GMT

பைல் படம்.

தாராபுரம் பழைய கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (33). இவர் தினசரி தாராபுரம் பகுதியில் உள்ள தோட்டங்களில் விளையும் தக்காளியை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி, தாராபுரம் மற்றும் சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனது மினி ஆட்டோ வாகனம் மூலம் கொண்டு சென்று அங்குள்ள மளிகைக் கடைகளுக்கு தக்காளி விற்பனை செய்து வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு, அலங்கியம் பகுதியில் இருந்து தக்காளி ஏற்றி வந்தவர், மினி ஆட்டோவை தனது வீட்டருகே நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அப்போது அதில், 15 கிலோ எடை கொண்ட 42 பெட்டிகள் இருந்தன. இந்நிலையில், நடராஜன் காலையில் விற்பனைக்காக ஆட்டோவை எடுத்துச்செல்ல வந்தபோது ஆட்டோவில் இருந்த தக்காளி அடைக்கப்பட்ட, 21 பெட்டி திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. தாராபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Tags:    

Similar News