வீரமா முனிவர் பிறந்த தினம்: அமைச்சர்கள் மரியாதை
வீரமாமுனிவரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
தாராபுரத்தில் வீரமாமுனிவரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது . அங்குள்ள அவரது படத்திற்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வீரமா முனிவரின் சேவைகள் குறித்து நினைவு கூர்ந்தனர்.