உப்பாறு அணையில் அரிய வகை பறவை
தாராபுரம் உப்பாறு அணையில், அரிய வகை பறவைகள் தஞ்சம் புகுந்துள்ளன.;
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே, உப்பாறு அணை உள்ளது. இந்த அணைக்கு வெளிமாநிலங்களில் இருந்து பறவைகள் வரத்துவங்கியுள்ளன. பறவை ஆர்வலர்கள் கூறுகையில்,'குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிய வகை பறவைகள் இந்த அணைக்கு வருகின்றன. இதில், சில பறவைகள், முதன் முறையாக அணையில் தென்படுகின்றன. எனவே, இயற்கை சூழலை பாதுகாத்து, பறவையினங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம்' என சமூக ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.