குண்டடம்; கால்நடை மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை
Tirupur News- திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- குண்டடம் அருகே நடந்த கால்நடை மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
குண்டடம் அருகே ஜோதியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராமநாதபுரத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. இதில் குண்டடம் கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவா் வனிதா, பீலிக்காம்பட்டி மருத்துவமனை உதவி மருத்துவா் மோகன்ராஜ், கால்நடை பராமரிப்பு உதவியாளா் சுமதி உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் மாடு வளா்ப்போருக்கு ஆலோசனைகளை வழங்கினா்.
இதில் குடற்புழு நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சினைப் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. மேலும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கான போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பரிசுகளை பேட்டைக்காளிபாளையம் கால்நடை மருத்துவா் வெங்கடேசன், குண்டடம் ஒன்றிய கவுன்சிலா் சந்திரசேகா் ஆகியோா் வழங்கினா்.
இந்த முகாமில் ஜோதியம்பட்டி ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா் தங்களின் கால்நடைகளைக் கொண்டு வந்து சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து கொண்டனா்.
கிராமப்புற மக்கள் கால்நடை வளர்ப்பில் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக விளைச்சல் நிலங்கள் உள்ள பகுதிகளில் ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்ட வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் அதன்மூலமும் வருவாய் பெறுகின்றனர். குறிப்பாக கால்நடைகளால் பால் உற்பத்தி முக்கிய தொழிலாக, விவசாயிகளுக்கு உள்ளது. இதன்மூலமும் கணிசமான லாபமடைகின்றனர். ஆனால், அடிக்கடி கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களால், அவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அதனால் இதுபோன்ற கால்நடை சிகிச்சை முகாம்களை மாதம் இருமுறை நடத்தினால், நன்றாக இருக்கும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.