புலப்பணியாளர்களுக்கு பயணப்படி: பொதுக்குழுவில் தீர்மானம்
புலப்பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.;
தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தாராபுரம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயராமன், தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீகிருஷ்ண சாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:
திருப்பூர் மாவட்டத்தில் நிரப்பபடாமல் காலியாக உள்ள நில அளவர்கள், வரைவாளர்கள் மற்றும் புவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புலப்பணியாளர்களுக்கு பயணப்படி, அளவுப்படி வழங்க வேண்டும். நிலஅளவைத் துறையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட துணைத் தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.