ஊதிய பேச்சு வார்த்தை எப்போது? போக்குவரத்து ஊழியர்கள் எதிர்பார்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு.,) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.;

Update: 2021-11-23 15:30 GMT

தாராபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில்  ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு.,) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன், உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்கத்தின் திருப்பூர் மண்டல உதவி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சிபிஎம் தாலுக்கா செயலாளர் என்.கனகராஜ், உண்ணா விரதத்தை துவக்கி வைத்தார். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண்டல பொருளாளர் விஸ்வநாதன் பேசினார்.

இதில், வலியுறுத்தப்பட்ட கருத்துக்கள்:

போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை, அரசே ஏற்க வேண்டும். அதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஊதிய பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு பண பலன், அகவிலைப்படி உயர்வு. மருத்துவக்காப்பீடு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடவேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சங்கத்தின் கிளை தலைவர் அப்துல் ஜப்பார், உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News