குண்டடத்தில், ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Tirupur News,Tirupur News Today-குண்டடத்தில் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலத்துறை சார்பில், ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2023-05-20 12:42 GMT

Tirupur News,Tirupur News Today- குண்டடத்தில், ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழக அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினர்.

குண்டடம் 

Tirupur News,Tirupur News Today-குண்டடத்தில் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலத்துறையின் சார்பில், 142 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும், 5 பயனாளிகளுக்கு விலையில்லா இஸ்திரி பெட்டிகளும், 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 33 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள் என மொத்தம் 175 பட்டாக்கள் என மொத்தம் ரூ.1 கோடி 27 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். விழாவில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,

தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்  தி.மு.க.அரசு பொறுப்பேற்று இரண்டு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இதில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் குறிப்பாக தாய்மார்களுக்கு அரசு பஸ் கட்டணம் இல்லாத பயணம் என்கிற திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொடுமுடி முதல் ருத்ராவதி பேரூராட்சி வரை செயல்பட்டு வருகிறது.காலை உணவு திட்டம் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது, என்றார்.

விழாவில் குண்டடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மயில்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளகோவில்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி, மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். வெள்ளகோவில் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


முத்தூர் பேரூராட்சி, மகாலட்சுமி நகரில், ரூ.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை, அமைச்சர் திறந்து வைத்தார். 

அப்போது அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது,

வெள்ளகோவில் நகராட்சியில் 2022-23ம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டு தீத்தாம்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய பகுதியில் ஒரு லட்சம்கொள்ளளவு கொண்ட மேல்நிலை த்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலைத் தொட்டியிலிருந்து  1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முத்தூர் பேரூராட்சி மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர்பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன், என்றார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சிபொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News