தாராபுரம்; 50 சதவீத மானியத்தில் காளான் வளர்ப்பு கூடாரம் வழங்க நடவடிக்கை

Tirupur News. Tirupur News Today-தாராபுரம் வட்டாரத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் 50 சதவீத மானியத்தில் காளான் வளர்ப்பு கூடாரம் வழங்கப்பட உள்ளது.

Update: 2023-05-11 13:27 GMT

Tirupur News. Tirupur News Today- காளான் வளர்ப்பு கூடாரம், 50 சதவீதம் மானியத்தில் இனி கிடைக்கும். (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today - தாராபுரம் வட்டாரத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் 50சதவீத மானியத்தில் காளான் வளர்ப்பு கூடாரம் வழங்கப்படும் என, தோட்டக்கலை உதவி இயக்குனர் வித்யா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

காளான் வளர்ப்பு என்பது ஒரு சுயதொழில் வேலைவாய்ப்பு. இது விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தருகிறது. நம் நாட்டில் ஆண்டுதோறும் அதிகளவில் பண்ணைக் கழிவுகள் கிடைக்கிறது. இதில் ஓரளவு மட்டுமே கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பண்ணைக்கழிவுகள் எரிக்கப்பட்டு வருகின்றன. காளான் வளர்ப்பிற்கு சிறிய இடம் போதுமானது. பண்ணையில் கிடைக்கும் சோளம் மற்றும் வைக்கோல் ஆகியவைகளை முறையே காளான் விதை மற்றும் காளான் உற்பத்திக்கு பயன்படுத்தலாம். காளான் எடுத்த பின்பு உள்ள எஞ்சிய பொருட்களை இயற்கை உரமாக மாற்றி உபயோகிக்கலாம். புரதம் மற்றும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட காளான்களை உட்கொள்ளுவதால், ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கலாம்.

சிறு தொழில்கள் இனத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் காளான் வளர்ப்பு கூடாரம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் விவசாயிகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தேடுக்கப்பட்ட கவுண்டச்சிபுதூர், நல்லமபாளையம், பொம்மநல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த கிராம உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மணிகண்டன்- 7338726839, கனகராஜ்- 9976267323 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அசைவத்தை போன்ற சுவை தரும் காளான் 

காளான் சில்லி, காளான் ப்ரை, காளான் பிரியாணி, காளான் மஸ்ரூம், காளான் குழம்பு என அசைவத்தை போலவே, காளான் சுவையும், பலருக்கு பிடித்தமானதாக மாறியுள்ளது. இதன் சுவை, கோழி இறைச்சியின் சுவையை ஒத்திருப்பதாக பலரும் கூறுகின்றனர். அசைவத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் சில சத்துகள், காளான் சாப்பிடுவதாலும் மனிதர்களுக்கு கிடைக்கிறது. தவிர, காளான் வளர்ப்பு இப்போது நல்ல லாபம் தரும் ஒரு தொழிலாகவும் மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News