தாராபுரத்தில் உற்பத்தியாகும் நெல்விதைகள் தமிழகம் முழுவதும் வினியோகம் - அதிகாரி தகவல்
Tirupur News. Tirupur News Today-தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நெல்விதைகள் தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது என்று விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இணை இயக்குனர் ஜெய செல்வின் இன்பராஜ் கூறினார்
Tirupur News. Tirupur News Today. - திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நெல்விதைகள், தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது.
விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை சார்பில் விதை நெல் உற்பத்தியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் தாராபுரம் அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து வரவேற்றார்.
கூட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் தலைமை வகித்து பேசியதாவது, தமிழ்நாட்டிற்கு தேவையான 70 சதவீத நெல் விதைகள் தாராபுரம் பகுதியில் இருந்து உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்படுகிறது. தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடமை உற்பத்தியாளர்களுக்கு உள்ளது.தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து உற்பத்தியாளர்கள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் தரமான விதை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் அங்ககச் சான்று மற்றும் அங்கக விவசாயம் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் விதை உற்பத்தியாளர் தரப்பில் துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். தாராபுரம் பகுதிக்கு புதிதாக 3 விதைசான்று அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும். மேலும் சான்றுபணிக்கு தேவையான சான்று அட்டைகளை தேவைக்கேற்ப முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆய்வுக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வரும் விதை உற்பத்தியாளர்கள், விதை சான்று அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில், விதை சான்று அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.