தாராபுரத்தில், 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்

tirupur News, tirupur News today- தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் வீடற்ற தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.24.80 லட்சம் மதிப்பில் 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

Update: 2023-03-06 09:57 GMT

tirupur News, tirupur News today- தாராபுரம் நகராட்சியில், ரூ.24.80 லட்சம் மதிப்பில் 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

tirupur News, tirupur News today- தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் வீடற்ற தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.24.80 லட்சம் மதிப்பில் 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

தாராபுரம் பகுதியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, தாராபுரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ குமரேசன், திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல தலைவர் இல.பத்மநாபன், நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரூ.24.80 லட்சம் மதிப்புள்ள நிலத்தில் 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, 

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் உள்ள தேவேந்திரர் தெருவில், 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்டோருக்கு வீடுகட்ட வீட்டு மனை இடம் இல்லாததால் நெருக்கடியில் வசித்து வந்தவர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகாலமாக அரசிடம் கோரிக்கை வைத்து மனு கொடுத்து வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அந்த பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற போது என்னிடத்தில் மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கோரிக்கை வைத்தனர். அவர்களது, கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோல், அடித்தட்டு ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளை உடனடியா செவி சாய்த்து, கவனித்து உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசினார்.

அதே போன்று தாராபுரம் நகர்மன்ற தேர்தலின் போது, தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் புனிதா சக்திவேலிடமும் குடியிருப்பு மக்களுக்கு இலவச வீட்டு மனைவழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 19-வது வார்டில் தேவேந்திரர் தெருவில் வசிக்கும் செம்மொழி மகளிர் சுய உதவிக்குழு, செந்தமிழ், செங்காந்தள், மற்றும் மருதம் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 62 யயனாளிகளுக்கு வடுகபாளையத்தில் உள்ள அரசு நிலத்தில் இலவச வீட்டு மனை பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பகுதியை சேர்ந்த இலவச வீட்டு மனை பட்டா இல்லாதவர்களை தேர்வு செய்யப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில் குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி, 19-வது வார்டு கவுன்சிலர் புனிதா சக்திவேல் நகர அவை தலைவர் கதிரவன், நகரத் துணைச் செயலாளர் கம லக்கண்ணன், பிலோமினா, நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News