தாராபுரத்தில் வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பால் பீதி
தாராபுரத்தில் வீட்டுக்குள் சாரப்பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.;
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொட்டா பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்,45. இவர், தனது தோட்டத்துடன் கூடிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று மதியம் அவரது வீட்டுக்குள், நீளமான சாரப்பாம்பு ஒன்று புகுந்தது.
இதை கண்டு தங்கவேல் மற்றும் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். இது குறித்து உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசிம்மராவ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தங்கவேலின் வீட்டுக்குச் சென்றனர். தண்ணீர் தொட்டி உள்பகுதியில் புகுந்திருந்த பாம்பை, ஒரு மணி நேரம் போரடி, அதற்கு எந்த பாதிப்பும் இல்லாதபடி லாவகமாக பிடித்தனர்.
ஏறத்தாள 5 அடி நீளமுள்ள சாரப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர், செனகல்பாளையம் காட்டுப்பதியில் விட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.