மூன்று டன் ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது
தாராபுரம் பகுதியில், வேனில் மூன்று டன் ரேஷன் அரிசியை கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.;
தாராபுரம் அருகே, கேரளாவுக்கு கடத்த முயன்ற மூன்று டன் ரேஷன் அரிசியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம் திருமலைபாளையம் அருகே, போலீசார் வாகன சோதனை செய்தபோது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் பழனி புது ஆயக்குடியை சேர்ந்த நடராஜ் (வயது 33), அவர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து, கேரளாவுக்கு கடத்தி சென்று கள்ள சந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
அவருடன் திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு பகுதி சேர்ந்த டிரைவர் சரத்குமார் (25) இருந்தார். மொத்தம் 3 ஆயிரத்து 10 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் சரக்கு வேனை குடிமைப்பொருள் வழங்கல் குற்றனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். நடராஜ், சரத்குமார் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.