சிறுமிக்கு பாலியல் தொல்லை; 'போக்சோ'வில் வாலிபர் கைது
தாராபுரம் பகுதியில், 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த வாலிபரை, ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;
சிறுமியை பாலியல் தொல்லை செய்த வாலிபர், ‘போக்சோ’ வில் கைது.
தாராபுரத்தை அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23). கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் அவரது தாய், தந்தை இல்லாத நேரத்தில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமி, தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், தாராபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், பாலசுப்பிரமணியை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.