தாராபுரத்தில் சுகாதாரத்தை வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, தாராபுரத்தில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள், ஆறு கி.மீ., தூரம் சைக்கிள் பேரணி நடத்தினர்.

Update: 2022-04-08 01:15 GMT

தாராபுரம் அகரம் பப்ளிக்பள்ளி, உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடத்தினர். 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அகரம் பப்ளிக்பள்ளி, உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பள்ளி தேசிய மாணவர் படையினர், 100 சைக்கிள்களில் பேரணி சென்றனர். இப்பேரணியில், கர்ணல் ஜெ.பி.எஸ்.சவுஹான் பங்கேற்று, வாழ்த்தி பேசினார். தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராசு, கொடியசைத்துப் பேரணியை துவக்கி வைத்தார்.

அகரம் பள்ளியில் தொடங்கிய பேரணி, மீனாட்சிபுரம் கொளிஞ்சிவடி ஐந்து சாலை சந்திப்பு, அண்ணாசிலை, பூக்கடை கார்னர் அமராவதி ரவுண்டானா வழியாக வந்து, புதிய பேருந்து நிலையம் முன்பு பதாகைகளை ஏந்தியவாறு வந்தனர். மாணவ மாணவியர் ஆறு கி.மீ., தூரம் சைக்கிள் பேரணி நடத்தினர். தொடர்ந்து, மாணவர் குழுவினர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடகம், யோகா, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

Tags:    

Similar News