காடு வளர்ப்புக்கு மரக்கன்று: தாராபுரம் நர்சரியில் தயார்

வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், நடவு செய்யப்பட உள்ள மரக்கன்றுகள், தாராரபுரம் வனச்சரக நர்சரியில் வைக்கப்பட்டுள்ளன.;

Update: 2021-11-16 02:00 GMT

வேளாண்காடு வளர்ப்புத் திட்டத்துக்கென தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாய நிலங்களின் வரப்பு பகுதி மற்றும் நிலங்களில், தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் உள்ளிட்ட பல்வகை மரக்கன்றுகளை நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் முழுக்க, தாலுக்கா வாரியாக மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மொத்தம், 2.60 லட்சம் மரக்கன்றுகள் பெறப்பட்டு, தாராபுரம் வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மரக்கன்று பெற விரும்பும் விவசாயிகள், மொபைல்போனில், 'உழவர் செயலி' மூலம், தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். பின், அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களில் இருந்து ஒப்புகை சான்று பெற்று, தாராபுரம் சென்று மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News