சடையபாளையம் ஊராட்சியில் பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு

தாராபுரம் அருகே சடையபாளையம் ஊராட்சியில், பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;

Update: 2021-11-29 05:00 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சடையபாளையம் ஊராட்சி, மானுார்பாளையம் கிராமத்தில், பெண்கள் மற்றும் சிறார்கள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சடையபாளையம் ஊராட்சி தலைவர் ஈஸ்வரன், முன்னிலை வகித்தார். காவல் துறை அதிகாரிகள் பங்கேற்று, பெண்கள் மற்றும் சிறுமியர்க்கு எதிரான பாலியல் குற்றங்களில் சிக்காமல் தப்பிப்பது தொடர்பான கருத்துக்களை விளக்கினர். பெண்கள், தங்களுக்குரிய சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றனர்.

Tags:    

Similar News