சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை பராமரிப்பு ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-22 15:00 GMT

திருப்பூர் மாவட்டம், தாராபுாரம் நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் கோட்ட தலைவர் பீட்டர், தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் செந்தில்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜ், மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொதுநுாலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பால ராஜசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News