தாராபுரம், அவினாசியில் மழை

தாராபுரம், அவினாசி உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்து இதமான சூழல் நிலவியது

Update: 2022-04-15 01:45 GMT

கோப்பு படம் 

தாராபுரத்தில் கடந்த சில தினங்களாகவே, வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று மாலை, திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, 7:30 மணி துவங்கி, 9:00 மணிவரை, கனமழை பெய்தது.   இந்நிலையில், கொண்டரசம்பாளையம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும்  மழை பெய்தது.

மழை பெய்ததன் காரணமாக வெயிலின் தாக்கம் தணிந்து இரவில் கொஞ்சம் இதமான சூழல் நிலவியது.

Tags:    

Similar News