கிடா குட்டிகள் வழங்கும் திட்டம் தாராபுரத்தில் துவக்கம்
அரசின் கிடா குட்டிகள் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா தாராபுரத்தில் நடந்தது.;
திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளத்துபாளையம் பேரூராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மேச்சேரி இன ஆடு அபிவிருத்தி திட்டம் மற்றும் உயர் இன கிடாக்குட்டிகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர் பத்மநாபன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் திட்டத்தை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு கால்நடை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்