தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், நாளை (7ம் தேதி) மின்தடை
Tirupur News,Tirupur News Today- மூலனூர், கன்னிவாடி, கொளத்துபாளையம் ஆகிய 3 துணைமின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை (7ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், மின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தாராபுரம் மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தாராபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட மூலனூர், கன்னிவாடி, கொளத்துபாளையம் ஆகிய 3 துணைமின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையங்களில் மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
மூலனூர் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்;காலை 9 மணி முதல் மதியம் 2 மணி
அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.
கன்னிவாடி துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்;காலை 9 மணி முதல் மதியம் 2 மணி
மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.
கொளத்துப்பாளையம் துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்;காலை 9 மணி முதல் மதியம் 2 மணி
உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.