பைக் திருடிய வாலிபர் கைது

தாராபுரம் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-08-07 02:33 GMT

தாராபுரத்தில் பைக் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வசுந்தர். வீட்டு முன் நிறுத்தியிருந்த இவரது பைக் காணாமல்  போனது. வெள்ளைக்கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். வங்கி ஊழியர். வங்கி முன் நிறுத்தியிருந்த இவரது பைக்கும் காணவில்லை போனது. பைக்குகள் மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார், காங்கயம் பிரிவு ரோட்டில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திண்டுக்கல்லில் இருந்து நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்த போது, தாராபுரம் பகுதியில் பைக்குகளை திருடிய திண்டுக்கல், கருணாநிதி நகரை சேர்ந்த கணேசன் மகன் காளிதாஸ் (32) என்பது, தெரியவந்தது. வாலிபரை கைது செய்து, 2 பைக்குகளையும் மீட்ட போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். 

Similar News