இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு தாராபுரம் தாசில்தாரிடம் மனு
Tirupur News-இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட ராம் நகா் பகுதி மக்கள், தாராபுரம் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
Tirupur News,Tirupur News Today-ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமியிடம், கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட ராம் நகா் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம், கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அம்மாபட்டி, பனங்காடு, மாருதி நகா் ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
இந்த புறம்போக்கு நிலங்களை நிலபுலங்கள் உள்ளிட்ட வசதி உள்ளவா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். ஆகவே, மேற்படி நிலங்களை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்டு, கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட ராம் நகா் பகுதியில் வசித்து வரும் சொந்த வீடு இல்லாத ஏழைமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.