தாராபுரத்தில் ஓய்வூதியர் தின விழா
தாராபுரம் மூலனூரில் பென்சனர் தின விழா நடைபெற்றது.;
தாராபுரம் மூலனூரில் பென்சனர் தின விழா திருமண மண்டபத்தில் நடந்தஜது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் சங்க தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். சங்க துணைத் தலைவர் பொன்னையன் வரவேற்று பேசினார். சங்க பொருளாளர் ரகுநாதன், ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார்.
அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட பென்ஷன் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, சங்க துணை செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.