தாராபுரம் அருகே நல்லதங்காள் அணை திறப்பு

Opening of Nallathangal Dam-தாராபுரம் அருகே நல்லதங்காள் அணை திறக்கப்பட்டது.

Update: 2022-04-06 01:00 GMT

கோப்பு படம் 

Opening of Nallathangal Dam-தாராபுரம் அருகே நல்லதங்காள் அணையில் இருந்து குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் பயன்பாட்டிற்காக நாள் ஒன்றுக்கு 35 கன அடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிடும் அரசாணையை தொடர்ந்து தமிழக செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அணை நீரை திறந்து விட்டார்.

நல்லதங்காள் அணை தாராபுரம் மூலனூர் வெள்ளகோவில் உள்ளிட்ட விவசாய பகுதிகள் சார்ந்த 4 ஆயிரத்து 744 ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அணையில் மொத்த கொள்ளளவு 30 அடி;  தற்போது வடகிழக்கு பருவ மழையால் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் 17.91 கன அடி இருப்பில் உள்ள நிலையில் தாராபுரம் மூலனூர் வெள்ளகோவில் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நிலத்தடி நீர்மட்டம் உயரவும் கால்நடைகளுக்கான குடிநீர் தடையின்றி கிடைக்கவும் நாளொன்றுக்கு 35 கன அடி வீதம் ஏழு நாட்களுக்கு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டதை தொடர்ந்து தண்ணீர் திறந்து விட்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News