தாராபுரம் நகராட்சி பிரச்சனைகள் என்னென்ன? தலைவர் கள ஆய்வு

தாராபுரம் நகராட்சியில், மக்கள் பிரச்னைகள் குறித்து நகராட்சித் தலைவர் கள ஆய்வு செய்தார்.

Update: 2022-03-21 01:15 GMT

தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வது வார்டு பகுதியில், அடிப்படை வசதிகள் குறித்து, நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

கிறிஸ்தவ அனுப்பர் தெரு, பைரவர் கோவில் தெரு, புது மஜித் தெரு ஆகிய இடங்களில் சாக்கடை சுத்தம் செய்வது, நீர் தேக்க தொட்டிகள் பராமரிப்பு, போர்வெல் மற்றும் குழாய் பழுது பார்த்தல் என, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதை உணர்ந்து, அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார். வார்டு கவுன்சிலர் செலின் பிலோமினா, வார்டு செயலாளர் ஜெரால்டு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News