தாராபுரம்: அலங்கியத்தில் டாஸ்மாக் கடையில் ஒரு லட்சம் மதிப்பு மது பாட்டில்கள் திருட்டு

தாராபுரம் அருகே அலங்கியத்தில் டாஸ்மாக் கடையில் ஒரு லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;

Update: 2021-05-29 12:00 GMT

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  அருகே அலங்கியத்தில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் ஒரு கடையில், கதவு ஷட்டரை கட்டிங் இயந்திரம் மூலம் துளையிட்டு மது பாட்டில்களை திருட்டுப்போனதாக, அலங்கியம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அலங்கியம் போலீஸார் சென்று பார்த்தபோது, கடையின் உள்ள இருந்த 750, மது பாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ஒரு லட்சமாகும். கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, டிவிஆர் ரெக்கார்டரையும் திருடிச் சென்று, 700, மீட்டர் தூரத்தில் முள் புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது.
டிவிஆர் ரெக்கார்டரை கைப்பற்றி, அதில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து, போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பூரில் இருந்து வந்த  கைரேகை நிபுணர்கள், கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவம் குறித்து மது விலக்கு டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News