ஓட்டுச்சாவடிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம்
அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் பகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் பகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நாளை, வாக்குப்பதிவு மையங்களில், கொரேனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தன்னார்வலர்கள் பலர் முன்வந்துள்னர். கிராம சுகாதார செவிலியர் உள்ளிட்ட சுகாதார துறை பணியாளர்களும் ஈடுபடுகின்றனர்.
இப்பணியில் ஈடுபடுவோருக்கு, சுகாதாரத்துறையினர் வழங்கிய ஆலோசனை: வாக்காளர்கள் முக கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு சானிடைசர் மூலம் கைககை சுத்தம் செய்ய வைக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனையில், 98.6 பாரன்ஹீட் வரை இருக்கலாம். சிலருக்கு வெயிலில் நடந்து வந்த காரணத்தாலும் கூட, உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் உடல்வெப்பநிலை இருந்தால், அவர்களை சிறிது நேரம் நிழலில் அமர வைத்து, அதன்பிறகு, உடல் வெப்ப பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அவருக்கு, காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால், சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.