தாராபுரம்; வடுகப்பட்டியில், வரும் 12ம் தேதி மின்தடை
Tirupur News,Tirupur News Today- தாராபுரம் பகுதியில் உள்ள வடுகப்பட்டியில், பராமரிப்பு காரணங்களுக்காக வரும் 12ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு மின்சார வாரியம், தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
வடுகபட்டி துணை மின்நிலையத்தில் 12-ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் 12ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
மின்தடை பகுதிகள்;
வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குதரித்தான்பாளையம், சுள்ளி பெருக்கலாம்பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூரில் வரும் 13ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்;
திருப்பூர் மாநகராட்சி குடிநீர் பிரிவில் மூன்றாவது குடிநீர் திட்டத்தில் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இந்தக் குடிநீர் திட்டத்தில் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் 13.6.2023 அன்று குடிநீர் மாநகருக்கு வழங்க இயலாது என என்டிஏடிசிஎல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் மாநகரில் 13.6.2023 அன்று ஒருநாள் மட்டும் மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும்.
எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1,2,3 மற்றும் 4-க்குட்பட்டஅனைத்து வார்டு (1 முதல் 60 வரை) பகுதிகளில் 13.6.2023 ஒரு நாள் மட்டும் (செவ்வாய்க்கிழமை) குடிநீர் பகிர்மானத்தில் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 14.6.2023 ( புதன்கிழமை) முதல் மேற்கண்ட குடிநீர் பகிர்மானத்தில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.