தாராபுரத்தில் வரும் நவ. 2ல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
Tirupur News- தாராபுரத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் நவ. 2ம் தேதி நடக்கிறது.
Tirupur News,Tirupur News Today- தாராபுரத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நவம்பா் 2-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிா் திட்ட அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நவம்பா் 2-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இதில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பயின்றவா்கள், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் என அனைத்து தகுதியானவா்களும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.
மேலும், இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இந்த முகாமில் தமிழ்நாடு மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியவை அளிக்கப்படவுள்ளன. மேலும், விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.