விதிமுறை மீறிய குவாரிகள்: ரூ.9 கோடி அபராதம் வசூல்
தாராபுரத்தில், விதிமீறி செயல்பட்ட குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.;
தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் செயல்படும் முறையான அனுமதியுடன், அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் கல் எடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். அதன்படி, கோட்டட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இதில், சேனாதிபதிபாளையத்தில், மனோகர் என்பவரின் குவாரியில் இருந்து, அனுமதிக்கு அதிகமாக கல் எடுக்கப்பட்டது தெரியவர, 9.36 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.