தாராபுரம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-10-28 02:15 GMT

தாராபுரத்தில், கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்–ஆட்சியர் ஆனந்த மோகன் உத்தரவில், தாசில்தார் சைலஜா, வருவாய் ஆய்வாளர் துர்க்கைராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், உடுமலை சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சென்ற லாரியை நிறுத்தினர். அதிகாரிகளை கண்டவுடன் லாரி ஓட்டுனர் மற்றும் லாரியில் இருந்தவர்கள், இறங்கி ஓடி தலைமறைவாகினர்.

லாரியை ஆய்வு செய்த போது, அதில் 4 டன் அளவுக்கு, கிராவல் மண் இருந்தது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். இதுதொடர்பாக, வருவாய்த்துறையினர், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News