சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, அரசு ரூ.54 லட்சம் மானியம்; விவசாயிகளுக்கு அழைப்பு

Tirupur News,Tirupur News Today-தோட்டக்கலை பயிர்களுக்கு, சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, அரசு ரூ.54 லட்சம் மானியம் ஒதுக்கியுள்ளது.

Update: 2023-09-07 12:52 GMT

Tirupur News,Tirupur News Today-  சொட்டுநீர் பாசனம் அமைக்க, விவசாயிகளுக்கு அழைப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அருகே மூலனூர் வட்டாரத்தில் 2023-24-ம் நிதி ஆண்டிற்கு 225 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு தரப்பில், ரூ.54 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவசாயிகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

சொட்டு நீர்ப்பாசனம் அல்லது நுண்ணீர் பாசனம் என்பது முதன்மை குழாய், துணைக்குழாய்கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும்.

நீராதாரம் குறைந்து வருவதாலும். சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வருவதாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க உற்பத்தித் திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிப்பை பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிடைக்கும் நீரை கொண்டு வேளாண்மையில் நீடித்த நிலையான வருவாய் பெற வேண்டிய அவசியமான நிலையில் உழவர்கள் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காமல் உணவு உற்பத்திக்கு பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே நுண்ணீர் பாசனம் என்னும் சொட்டு நீர்ப்பாசன திட்டம் ஆகும்.

சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.ஏற்கனவே சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் கடந்திருந்தால், உபகரணங்கள் மாற்றிக்கொள்ள மீண்டும் மானியம் வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ்புத்தக நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகத்ததை கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மூலனூர் வட்டாரம் - 8838508679, கன்னிவாடி வட்டாரம் 9677776214, தோட்டக்கலை அலுவலர் 9385794707 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News