தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
Tirupur News-கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Tirupur News,Tirupur News Today- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே நடந்த இந்தப் போராட்டத்துக்கு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாந்தி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பாஸ்கரன் தொடக்க உரையாக பேசினாா்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் கோரிக்கைகளை விளக்கி மாநில இணை ஒருங்கிணைப்பாளா் நவீன் பேசினாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், சிபிஎஸ் திட்ட ஊழியா்களுக்குப் பணிக்கொடை வழங்கக் கோரியும் கோரிக்கை விடுத்து, முழக்கங்களை எழுப்பினா்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க நிா்வாகி வித்யா, பொது சுகாதாரத் துறை மாவட்டச் செயலாளா் ரவி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ரீட்டா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ராஜூ, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் தமயந்தி உள்ளிட்ட அரசுத் துறை ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.