தாராபுரம் நகர மன்றத் தேர்தல்: ஆர்வமுடன் விருப்ப மனு வழங்கி வரும் திமுகவினர்
தாராபுரம் நகர மன்றத்தேர்தலுக்கு போட்டியிட ஆர்வம் உள்ள திமுகவினர் , விருப்ப மனு வழங்கி வருகின்றனர்.;
விரைவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தாராபுரம் பகுதி திமுகவினரும், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.
அதன்படி, தாராபுரம் நகர மன்ற வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், திமுக நகர செயலாளர் கே. எஸ். தனசேகரிடம், விருப்ப மனு வழங்கி வருகின்றனர். இதில் ஆர்வமுடன் பலர் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, கட்டணத்துடன் உரிய நிர்வாகிகளுடன் வழங்கி வருகின்றனர்.