நெருங்குது தீபாவளி, ஆடுகளுக்கு கிராக்கி; ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி

Tirupur News- தீபாவளி நெருங்குவதால், ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், ஆடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2023-10-29 13:09 GMT

Tirupur News- தீபாவளி நெருங்குவதால், ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. (கோப்பு படங்கள்)

Tirupur News,Tirupur News Today- மூலனூர்: தமிழகத்தில் நடக்கும் முக்கிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தையாகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது.இங்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து ஆடுகளை இறைச்சிக்காக வாங்கி செல்கின்றனர்.

அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக இந்த பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் மேலும் செம்மறி மற்றும் மேச்சேரி இன ஆடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் இனி வரும் காலங்களில் மழைக்காலம் தொடங்குவதால் இந்த பகுதியில் மேய்ச்சல் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் அதிக லாபம் தரும் மேச்சேரி இன மற்றும் செம்மறி ஆடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது

இதனால் ஆடுகளின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த வாரத்தில் 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.770 என்ற அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு செம்மறி ஆட்டின் விலை ரூ.7ஆயிரத்து 700 ஆகும்.இதனால் கன்னிவாடி சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

வரும் நவம்பர் 12ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விலை மேலும் உயரும் என்பதால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News