நர்சு பணியிடம் நிரப்ப முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்: அமைச்சர் சாமிநாதன்

நர்சு பணியிடங்கள் நிரப்புவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

Update: 2021-05-26 11:57 GMT

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் சாமிநாதன்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் விஜய்கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் ஆய்வு செய்யும் நோக்கில்  திருப்பூர் மாவட்டத்தில் பாப்பினி, வெள்ளகோவில், மூலனூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று ஆய்வு செய்யப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர்கள், டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து தமிழக முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றார்.  ஆய்வின் போது சுகாதாரத்  துறை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி உள்பட பலர் உடனிருந்தனர்.


Tags:    

Similar News