தாராபுரம்: பழுது பார்க்கும்போது டிரான்ஸ்பார்மரில் விபத்து

தாராபுரத்தில் டிரான்ஸ்பார்மரில் வேலை பார்த்தபோது விபத்து

Update: 2021-05-25 14:20 GMT

தாராபுரத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து தீப்பற்றி எரிந்ததில் படுகாயமடைந்தார்.

தாராபுரம் தென்கரைப்பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர், தாராபுரம் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சங்கர்மில் பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் ஏறி இன்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதனால் காளிமுத்துவின் உடலில் தீப்பற்றியதில், மின் கம்பத்திலேயே மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள், 108 க்கு தகவல் தெரிவித்தனர். சக ஊழியர்கள் மின்வாரத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் விபத்தில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தாராபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News