திருப்பூர்: தாராபுரம் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடத்தை அடுத்த சோத்தியம்பட்டியில், விவசாய தோட்டம் ஒன்றில், சாராய ஊறல் இருப்பதாக, தாராபுரம் மது விலக்கு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விநாயகம், குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் உள்பட 10 க்கும் மேற்பட்ட போலீசார், அங்கு சென்று சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், 3 பிளாஸ்டிக் பேரல்களில் 500 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஊறலை கைப்பற்றி அழிக்கப்பட்டதோடு, ஊறல் போட்ட சோதியம்பட்டியை சேர்ந்த ஆறுசாமி,47 என்பவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.